முல்லை பெரியாறு அணை - இன்றிலுருந்து சுமார் 115 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. கல்லணை கட்டப்பட்டது ஆயிரம் வருடங்களுக்கு முன்பு.. அது தமிழகத்தினுள் உள்ளதால் நல்ல வேளை அண்டை மாநிலத்தார் வேறு யாரும் அதனில் பிரச்சினை எழுப்பவில்லை.
கேரள மாநிலத்தில் இருந்தாலும் முல்லை பெரியாறு அணை தமிழத்திற்கு சொந்தம். கேரள அரசு இடுக்கி மாவட்டத்தில் பெரியாறு அணையை விட 7 மடங்கு பெரிய அணையை கட்டிவிட்டது. ஆனால் அதில் தண்ணீர் நிரப்புவதற்கான வழி வகைகளை ஆராய்ந்தது. மலையாள மனோரமா பத்திரிக்கை கை குடுத்து உதவியது. குடுத்த காசுக்கு கூக்குரலிட்டது . கேரள அரசு உடனே தண்ணீர் மட்டத்தை குறைக்க உத்தரவிட்டது. அதிலிருந்து பிரச்சினை பிரச்சினை தான்..
சிவகாமி கம்ப்யூட்டர் ஒருவேளை சொல்லிடிச்சோ.. தமிழ்நாடு உனக்கு தண்ணியில கண்டம்னு.. கர்நாடகாவோட காவேரி , கேரளாவோட முல்லை பெரியாறு .. வங்கக்கடலோட சுனாமி , இந்திய பெருங்கடலோட ஸ்ரீலங்கா இராணுவத்தினரின் அத்துமீறல்.. தமிழ்நாட்டை சுத்தி தண்ணியில கண்டம் தாங்க..
ஸ்ரீலங்கா ராணுவம் அத்து மீறி நமது மீனவர்களை தாக்குகிறார்கள் எனில் பதில் தாக்குதல் நடத்த அவர்கள் நாட்டவர்கள் நமது ஊரில் இல்லை. ஆனால் மலையாளிகளுக்கு என்ன வந்தது .
ஒரு கதை ஊருக்குள் வலம் வருவது உண்டு.. நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் காலடி எடுத்து வைத்தபோது அங்கு ஒரு நாயர் டீ வேண்டுமா அல்லது காபி வேண்டுமா என்று கேட்டாராம். வேறு ஒன்றுமில்லை .. மலையாளிகள் பூமியை மட்டுமல்ல எல்லா இடத்திலும் நிறைந்து வழிந்துக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு புள்ளி விவரப்படி தமிழகத்தில் உள்ள மலையாளிகள் எண்ணிக்கை 30 லட்சத்திற்கும் அதிகம்.நாம் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்துக்கொண்டு இருக்கிறோம்.
வந்தாரை வாழவைக்கும் நாடு தமிழ்நாடு. அட வாழையும் வைக்கட்டும் ஓலையும் வைக்கட்டும் , ஆனாலும் வந்தவர்கள் யாராயினும் என்ன செய்தாலும் உபசரித்துக்கொண்டு மட்டுமே இருக்க வேண்டும் என்று கட்டாயமில்லை.
மத்திய அரசின் ஒரு அங்கமான கேரள அரசுக்கு இடைத்தேர்தலில் வென்றாகவேண்டிய கட்டாயம் , மத்திய அரசுக்கு தமிழகத்தின் கூடங்குளம் ஒரு தலைவலி. ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க வேண்டும் , என்ன செய்யலாம் , எடுத்தது முல்லை பெரியாறு கல்லை. நமக்கு ஏற்கனவே தண்ணி விஷயத்துல பலவீனமின்னு அவங்களுக்குதான் எப்பவோ தெரியுமே. இப்போ என்ன ஆச்சு , கூடங்குளத்தில் போராட்டம் நடக்கிரதாவென்று நேற்று வரைக்கும் தெரியவில்லை .. ஆனால் இன்று தெரிந்தது .. பிரதமர் ரஷ்யா போகிறாராம் , கூடங்குளத்தில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம். நான் உடனடியாக பிரதமரை பார்த்து இந்த கருப்புக்கொடி போராட்டத்தை பற்றி சொல்ல வேண்டும். அனுமதி கிடைக்குமா .. அட யாருப்பா நீ , 20 நாளா நான் அனுப்பிய கடிதம் கிடைத்தது என்று கூட தகவல் தெரியாமல் காத்துகொண்டிருக்கிறேன் என்கிறார் நம் முதல்வர்.
பாவம் பிரதமர் என்னதான் செய்வார் , எவ்வளவு கேள்விக்குதான் ஒரே பதிலை சொல்லிக்கொண்டு இருப்பார். பார்த்தார் வெளிநாட்டு சுற்று பயணம் கிளம்பி விட்டார். நிம்மதி வேண்டாமா? ஆனால் கூடங்குளத்து காரர்கள் தங்கள் போராட்டம் தொடர்வதை சொல்லிக்காட்ட இடம் கொடுத்து விட்டார்.
இன்றைய அரசியல் போதைக்காரர்களுக்கு நமது தண்ணீர் பிரச்சினை ஊறுகாய் ஆகிவிட்டது.
இப்போதைய நம்முடைய உடனடி தேவை , நம்முடைய தண்ணி கண்டம் போக வேண்டும்.. உங்களுக்கு தெரிந்த ஒரு நல்ல மலையாள மாந்த்ரீகர் இருந்தார் என்றால் சொல்லுங்களேன் ..
அன்புடன் விவேக்..
While you smile , You are Beautiful.. While you Laugh, You are very Beautiful.. Atleast be beautiful.
No comments:
Post a Comment