எனது மகனுக்கு (அக்ஷித்) வரும் ஜனவரி வந்தால் இரண்டு வயது பூர்த்தியாகிறது. இன்றிலிருந்து நான்கு மாதங்களுக்கு முன்னால் ஒரு நாள் , எனது அண்டை வீட்டுக்காரர் ஒருவர் அவரது மகனுக்கு பள்ளிக்கு செல்ல விண்ணப்பம் வாங்கி விட்டதாகவும் , நான் வாங்கியாகிவிட்டதா என்று விசாரித்தார். நான் அதிர்ந்து விட்டேன். நான் அதிர்தந்தற்கான காரணங்கள் இரண்டு.
ஒன்று , என் மகனுக்கு அப்பொழுது ஒன்றரை வயதுதான் ஆகியிருந்தது. அப்பாவென்று இப்பொழுது கூப்பிடலாமா அல்லது சிறிது மாதங்களுக்கு பிறகு கூப்பிடலாமா என்று யோசித்துக்கொண்டு இருந்தான். வேறு ஒன்றுமில்லை பேச தொடங்கவில்லை.
அக்ஷித் சுரேஷ்
இரண்டு , அண்டை வீட்டுக்காரரது மகன் என் மகனை விட இரண்டு மாதங்கள் சிறியவன்.
நான் குழப்பம் அடைந்து விட்டேன். அவரை ஒருவாறாக சமாளித்து அனுப்பினேன். நானெல்லாம் 5 வயதில் பள்ளி படிப்பை தொடங்கியவன். என் மகனை பால்குடி பாலகானாயிருக்கும்போதே பள்ளிக்கு அனுப்ப என் மனம் ஒப்பவில்லை. சரி வேறு என்ன செய்யலாமென்று யோசித்தேன். நகராட்சி அல்லது மாநகராட்சி பள்ளிகளில் தான் 5 வயதில் பள்ளியில் சேர்ப்பார்கள். அப்பள்ளிகள் ஒன்றும் மற்ற பள்ளிகளை விட சளைத்ததல்ல. இன்றைய நம் தேசத்து பழுத்த விஞ்ஞானிகள் பெரும்பாலோர் அப்பள்ளிகள் பழுத்தவர்கள்தான்.
ஆனால் இன்றைய சூழ்நிலை அப்படியல்ல. எவ்வளவுதான் பிறவி ஞானியாக இருந்தாலும் , அயல்மொழி புலமை இல்லையெனில் , ஊமையொருவர் பேச்சுப்போட்டிக்கு சென்றதுபோல்தான்.
சரி , மெட்ரிகுலேசன் பள்ளியிலேயே மகனை சேர்ப்போம் ஆனால் இப்போது வேண்டாம் இன்னும் ஒரு ஆண்டு காலம் கழித்து சேர்ப்போம் என்று முடிவெடுத்தோம். ஆனால் பள்ளியில் சேர்பதற்கான நடைமுறையை இப்போதோ விசாரித்து வைப்போம் என முடிவு செய்தோம். விசாரிக்க விசாரிக்க தலை கிறுகிறுத்துப்போனோம்.
பள்ளியில் சேர்வதற்கான விண்ணப்ப கட்டணம் , அனுமதி கட்டணம் , சிறப்பு கட்டணம் , மாதந்திர கட்டணம் இவையெல்லாம் சேர்த்தால் கிட்டத்தட்ட 50 ,000 ரூபாய். இது போக சீருடை , பள்ளிப்பேருந்து கட்டணம், சுற்றுலா கட்டணம் , கல்விசார் கூடுதல் கட்டணம் இவையெல்லாம் தனி. அட இதுகூட பரவயில்லை என்பது போல் விண்ணப்பத்துடன் இணைக்கப்படவேண்டிய சான்றிதழ்கள் பட்டியல்தான் என்னால் ஒப்புக்கொள்ளவே முடியவில்லை. எனது மற்றும் எனது மனைவியின் கல்வி சான்றிதழ்கள் ( வீட்டில் எமது குழந்தைக்கு சொல்லிக்கொடுக்கும் தகுதி எங்களுக்கு இருக்கிறதா என்று பார்த்து கொள்வதற்கு , அப்புறம் இவ்வளோ பணம் கட்டி பள்ளியில் சேர்த்தால் , இவர்கள் சொல்லிக்கொடுக்க மாட்டார்களா ? ) அடுத்து எனது சம்பள பட்டியல் ( இவர்கள் அவ்வபொழுது சொல்லும் கட்டணங்களையும் சேர்த்து கட்டும் வசதி எனக்கு இருக்கிறதா என்று சோதிக்க.. ஹாங் இது ரொம்ப சரி .. நியாயமாத்தான் கேக்குறாங்க.. இல்லையின்னா கோவணத்தோட ஓடி போயிட்டா .. அதையும் உருவனுமில்ல ..)
மேற்கத்திய நாட்டு மோகம் இருக்க வேண்டியதுதான்.. ஆனால் கல்வியில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்து விட்டு செய்ய வேண்டாமா.. ஈ அடிச்சான் காபி எல்லா விஷயத்திலும் செய்ய வேண்டும். உதாரணமாக கொடுத்து இருக்கும் இணைப்பை சொடுக்கினால் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தின் இளஞ்சிறார் படிப்பிற்கான சட்ட திட்டங்களை தெரிந்துகொள்ளலாம். எல்லா சட்டதிட்டங்களையும் விடுங்கள் , பள்ளியில் சேர்வதற்கான சரியான வயதை பாருங்கள் 5 வயது முடிந்து இருக்கவேண்டும் என்று இருக்கும்.
ஆனால் எது எப்படியோ இந்த ஆண்டு என் மகனை பள்ளியில் சேர்க்க வில்லை . எமது மகன் எங்கள் பேரை சொல்ல வேண்டாம் . அவனது பெயரை சொல்லட்டும் பிறகு பள்ளியில் சேர்க்கலாம் என்று முடிவெடித்து விட்டோம் . என்னமோ தெரியவில்லை எங்கள் மகனது முகத்தில் சிரிப்பை பார்த்தது போல் இருந்ததது.
என்றும் அன்புடன்,
விவேக்,
While you smile , You are Beautiful..
While you Laugh, You are very Beautiful..
At-least be beautiful.
No comments:
Post a Comment