சற்றேறக்குறைய 2 மாத இடைவெளி.. வலைப்பூவில் தேனெடுக்க முடியவில்லை..
சில விஷயங்களைப்பற்றிய என்னுடைய கருத்துக்களை பதிவேற்றவேண்டுமென்ற எண்ணத்தினால் மீண்டு வந்துள்ளேன்..
1 . சங்கரன்கோயில் இடைத்தேர்தல்.
2 . தொடர் மின்வெட்டு
3 . ஐக்கியநாட்டு சபையில் இலங்கையின் மீதான அமெரிக்காவின் தீர்மானம்
4 . இந்திய நிதிநிலை அறிக்கை
மேலே குறிப்பிட்ட நான்கில் மூன்று தமிழர்களுக்கானது .. நான்காவது இந்தியர் அனைவருக்குமானது..
சங்கரன்கோயில் இடைத்தேர்தல் வெற்றிவேட்பாளர் யாரென்று யாருக்கேனும் சந்தேகம் உள்ளதா.. சிறு குழந்தைக்கூட தெரியும் ஆட்சியாளர்கள் எவரோ அவர் அணியினரே வேல்லப்போகிறவர்..
மின்வெட்டு பிரச்சினை இருந்தாலும் .. அது பிரச்சினையே இல்லையெனும் அளவிற்கு வேறு சில பிரச்சினைகள் இருந்தாலும் .. அவையனைத்தையும் நம் அரசு தீர்த்து விடாதா என்ற ஏக்கம் ஏழை பாமரன் ஒவ்வொருவருக்கும் இருக்கும் ..
நம் தொப்புள்கொடி சொந்தம் ஈழத்தமிழர்கள் ஈனத்தமிழர்களாக நடத்தப்படுவதை நாம் தட்டிகேட்கவில்லை.. சரி போகட்டும்.. அன்னியர்கள் எதோ ஒரு காரணத்திற்காக இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வந்திருக்கிறார்கள்.. அதையாவது ஆதரிக்கலாமில்லையா .. ஆனால் தெளிவான பதில் அவர்களிடம் இல்லை .. பொறுத்திருந்து பார்ப்போம்..
இந்த இந்திய திருநாட்டு நிதிநிலை அறிக்கை எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்ககூடியதாக இருக்கிறது..
தினமும் அலுவலகத்திற்கு காலையும் மாலையும் விமானத்தில் செல்வதால் .. விமான நிறுவனங்களுக்கு அளித்திருக்கும் சலுகைகளால் எனக்கு ஏதேனும் சலுகை கிடைத்து விடாதா என்ற நப்பாசை..
அடுத்து தங்கம் விற்கும் விலையில் சுற்றி பார்க்க மட்டுமே நகைக்கடைக்கு செல்லும் சூழ்நிலை இருந்தது.. அதிரடி சுங்க வரி விதிப்பின் மூலம் ஒற்றை கல்லில் இரட்டை மாங்காய் அடித்திருக்கிறது நமது அரசு.. ஒன்று சாமானியர்கள் நகைக்கடைக்கு போகத்தேவையிருக்காது .. இரண்டாவது தங்கக்கடத்தலை ஊக்குவித்தமாதிரியும் ஆனது..
இவர்கள் சொல்லும் நிதிநிலையறிக்கை சாமானியர்களுக்கானதல்ல.. மிகவும் பெரிய கார்பொரேட் நிறுவனங்களின் ஆதாயத்திற்கானது..
இதற்க்கெல்லாம் தீர்வு..அடப்போங்க சார் .. எனக்கு வேற வேற வேலையிருக்கு.. வேற என்ன செய்ய முடியும் நம்மால்... நாளைக்கு சோத்துக்கு .. இன்னிக்கு பொழப்பு பாக்கணும்.. நாம்தான் அன்றாடந்காய்ச்சிகளாயிற்றே..
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.. நாம் மனது வைத்தால் எதையும் எந்த சூழ்நிலையும் மாற்றலாம் மாற்றிக்காட்டலாம்.. அதற்கு தீர்க்கமான ஒரு தொலைநோக்கு பார்வையும் கொஞ்சம் அதிகமான பொறுமையும் தேவை..
5 அண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் திருவிழா.. தேர் வடம் இழுப்பவர்கள் நாம் தானே.. எந்த தேரை நகர்த்த வேண்டும் என்ற முடிவை நாம்தானே எடுக்க வேண்டும்.. நிலைமையை 100 சதவீதம் முழுமையாக மாற்ற முடியாது.. ஆனால் அதற்கான முதலடியை எடுத்து வைக்கலாமல்லவா.. இன்னாரை தெரியுமேன்றேல்லாம் தேர்ந்தெடுக்காமல் .. இன்னாரை தெரிவு செய்தால் நிலைமையை சீர் செய்வார் என்று நம்புபவரை தெரிவு செய்யலாமே.. இல்லையெனில் மீண்டும் மீண்டும் சொதப்புவதுபோலாகிவிடும்..
மனமிருந்தால் மார்கபந்து..
என்றும் அன்புடன்,
விவேக்.
While you smile , You are Beautiful.. While you Laugh, You are very Beautiful.. Atleast be beautiful.

அற்புதம்.
ReplyDelete