சென்ற வாரத்தில் ஒரு நாள் அலுவலகத்தில் இருந்து வந்து கொண்டிருந்தபோது பயங்கரமான் டிராபிக் ஜாம் .. அந்த இடத்தில டிராபிக் ஜாம் ஆகுவதற்கு வாய்ப்பே கிடையாது..
அப்போது என்னுடன் பயணித்த சக ஊழியர் சொன்னார் , அனேகமாக அங்கு டிராபிக் போலீஸ் சோதனை இருக்குமென்று . அது எப்படி சொல்லுறீங்கன்னு கேட்டதற்கு அவர் சொன்ன பதில் .. தேதி 20 க்கு மேல ஆகிடிச்சியில்ல..
எங்கள் வாகனம் மெதுவாக ஊர்ந்து சென்றது.. நண்பர் சொன்னது சரிதான் . அங்கு டிராபிக் போலீஸ் சோதனை செய்து கொண்டு இருந்தார்கள்.. அதுவும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மட்டும்..
இதேபோல் ஒரு நாள் , நானும் என் மனைவியும் எனது யமஹாவில் கோவிலுக்கு சென்று கொண்டு இருந்தோம் , சற்று தொலைவில் போலீசார் எனக்கு முன்னே தனியாக சென்று கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டிகளை நிறுத்தி சோதனை செய்து கொண்டிருந்தார்கள்..
சரி , நம்மையும் சோதனை செய்வார்கள் என்று மெதுவாக சென்றேன்.. ஆனால் எங்களை நிறுத்த சொல்லவில்லை.. பிறகுதான் தெரிந்தது தனியாக செல்லும் அல்லது இருவருமே ஆடவராக இருக்கும் பட்சத்தில் மட்டும் சோதனை செய்கிறார்கள் என்று..
என் மனைவி என்னிடம் கேட்டார்.. என்னங்க நம்மளை ஏன் சோதனை பண்ணவில்லைஎன்று..
அதற்கான என்னுடைய பதில் : நான் ஏற்கனவே சோதனையுடன் தான் வந்துகொண்டிருக்கிறேன் என்று அவர்களுக்கு தெரிந்திருக்கும்..
பிறகென்ன எனக்கு வீட்டில் சோதனை மேல் சோதனை தான் ..
என் மனதில் இருக்கும் மூன்று கேள்விகள்.
1 . இரு சக்கர வாகன ஓட்டிகள் மட்டும் தான் தவறு செய்வார்களா?
2 . அதுவும் மாத கடைசியில் மட்டும்தான் செய்வார்களா?
3 . குடும்பத்துடன் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் தவறே செய்ய மாட்டார்களா ?
பதில் தெரிந்தவர்கள் சொல்லவும்..
அன்புடன் விவேக்.
No comments:
Post a Comment