என்ன நண்பர்களே .. தலைப்பில் ஏதேனும் எழுத்து பிழை என்று நினைத்து விட்டீரோ..
சத்தியமாக இல்லை.. சந்தேகம் கொள்ள வேண்டாம்..
கற்றது கையளவு .. அது அந்த காலத்தில்..
உண்மையை சொல்ல வேண்டுமென்றால் .. கடுகை விட சிறியதாக ஏதேனும் சொல்ல வேண்டும்..
ஊர் பக்கம் சென்றால் .. யாரேனும் ஏதேனும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய உதவி கேட்டு வருவார்கள். நான் அந்த விண்ணப்பத்தை வாழ்க்கையில் அன்று தான் பார்த்திருப்பேன்.
அய்யா எனக்கு தெரியாது என்றால் .. என்ன தம்பி இவ்ளோ படிச்சியிருக்கீங்க.. இது கூட தெரியாதா என்பார்..
பரவாயில்லை.. தெரியாததை தெரியாது என்று சொல்வதில் வெட்கமில்லை..
எனது பள்ளி பாடத்திலோ அல்லது கல்லூரி பாடத்திலோ அந்த விண்ணப்பத்தை பற்றி சொல்லிக்கொடுத்திருந்தால் , எனக்கு தெரிந்து இருக்கும்..
சரி , நான் என்னதான் சொல்ல வருகிறேன் என்று கேட்கிறீர்களா .. விஷயத்துக்கு வருகிறேன்..
ஊழல் இல்லா நாடு..
ஆஹா சொல்வதற்கும், கேட்பதற்கும் எவ்வளவு நன்றாக இருக்கிறது..
ஆனால் நாம் அதற்கு என்ன செய்வோம். அதிபட்சமாக காலை செய்தித்தாளைப் புரட்டி ஊழல் பற்றிய செய்திகளை படிப்போம். ஊழலுக்கு எதிரான நம் பங்களிப்பு அவ்வளவுதான்.
சற்று அதிகப்படியான பங்களிப்பா...பிடி அன்னா ஹசரேக்கான ஆதரவை.. பாபா ராம்தேவ் மகாராஜிற்கு ஆதரவை.. முகபுத்தகத்தில் அவர்களை பற்றி இரண்டு வரி சேர்.. ஊழலை ஒழித்தாயிற்று .. அடுத்தது சாம்பாருக்கு வெங்காயம் அரிய வேண்டும்..
கோவம் வரலாம் .. ஆனால் உண்மை அதுதான்.. அதுவும் எனக்கும் சேர்த்துதான்..
அன்னா ஹசாரே
பாபா ராம்தேவ்
இவர்கள் உண்ணா விரதம் இருந்தார்கள். நாடு முழுவதும் அவர்களுக்கு ஆதரவு பெருகிற்று.. நோக்கம் நிறைவேறியதா .. ஆனால் உண்ணாவிரதம் முடிவுற்றது.. நானும் கருப்பு சட்டை அணிந்து ஆதரவு தெரிவித்தேன்.. அதன் பிறகு அந்த சட்டையை காக்கா தூக்கி போய் விட்டது அல்லது காக்காவுக்கு தூக்கி போட்டுவிட்டேன்..
ஊடகங்கள் அவர்களுக்கு தேவைக்கு அதிகமான விளம்பரங்களை ஈட்டி கொடுத்துவிட்டன. உண்ணாவிரதம் முடிந்த பிறகு தான் தெரிந்தது அதற்கான செலவுகள் கோடிகளில்..
செலவு செய்தது .. கார்பொரேட் நிறுவனங்கள்..
மத்திய அரசுக்கு எதிரான இவர்களது போராட்டங்கள் மூலம் , கார்பொரேட் நிறுவனங்கள் ஏதேனும் ஆதாயம் அடைந்தார்களா.. எனக்கு கல்லூரியில் சொல்லி தரப்படவில்லை.
இரோம் சானு சர்மிளா... இவரை பற்றி ஏதேனும் தெரியுமா ..
இவர் 2000 ஆம் ஆண்டு நவம்பர் முதல் உண்ணா விரதம் இருக்கிறார். கிட்டத்தட்ட 11 வருடங்கள்..
இரோம் சானு சர்மிளா
எதற்காக , ஆயுதப்படை சிறப்பு சட்டம் 1958 ஐ திரும்ப பெறக்கோரி.. அந்த சட்ட நீக்கத்தின் மூலம் அவர் தனிப்பட்ட ஆதாயம் அடைய போவதில்லை.. வேண்டுமானால் ஒரு ஆதாயம் அவரது அன்னை அடையலாம்.. கடந்த 11 வருடங்களாக பட்டினி கிடந்த அவரது மகள் சர்மிளா உணவு உண்ணலாம், இழந்து போன அவரது வாழ்க்கை திரும்ப கிடைக்குமா.. ஒருவேளை இந்த போராட்டத்தின் மூலம் இந்திய அரசாங்கத்தினை மிரட்ட முடிந்தால் நமது கார்பொரேட் நிறுவனங்களும் அவர்களது ஆதரவு ஊடகங்களும் , இவரது போராட்டத்திற்கு இந்திய மக்களிடம் ஆதரவு திரட்டி கொடுத்திருப்பார்களோ..
இதுவும் எனக்கு எங்கும் சொல்லி தரப்படவில்லை..
நம்மால் நாட்டுக்காக அல்லது நாட்டு மக்களுக்காக உண்ணாவிரதம் இருக்க முடிவதில்லை.. நம்முடைய ஆதரவையாவது சரியான நபருக்கு கொடுக்கலாமல்லவா ..
அது சரி , சரியான நபர் யார் என்று எங்கே சொல்லிக்கொடுப்பார்கள்.?
அன்புடன் ,
விவேக்,